கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்! பாராட்டும் மக்கள்!
உத்தரபிரதேச முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் தனது ஒன்றரை வயது கைகுழந்தையுடன் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கௌதம் புதூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.
நொய்டாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் சென்றபோது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் பெண் காவலர் ப்ரீத்தி ராணி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
தாய்மைக்கும், கடமைக்கும் சரிசமம் இடம் கொடுத்த இந்த பெண் காவலரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.





