ராணுவ வீரர் என்று கூறி கோழிக் கடைக்காரரிடம் ஆன்லைன் மோசடி
புதுச்சேரியில் ராணுவவீரர் எனக்கூறி கோழி கடைக்காரரிடம் வங்கி டெபிட் கார்டு தகவல்களை வாங்கிவிட்டு 2000 ரூபாய் பணம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நயினர் மண்டபத்தில் கோழி கடை நடத்தி வருபவர் பிரகலநாதன்.
இவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர் தனக்கு 30 கிலோ சிக்கன் வேண்டும் என்றும் அதற்கான பணத்தை ஆன்லைனில் கட்டி விடுகிறேன் என்றும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வங்கி கணக்கு எண்ணை பயன்படுத்தி பணம் அனுப்ப முடியவில்லை எனக் கூறி டெபிட் கார்டு தகவல்களை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த நபர் தன்னை ராணுவ வீரர் என கூறியதால் பிரகலநாதன் நம்பி டெபிட் கார்டை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். ஓட்டிப் இயையும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கியில் இருந்து 2000 ரூபாய் எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகலாதன் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.





