--- --:--:-- --

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 95வது நாளை எட்டியுள்ளது..!

4

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 95வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஏராளமான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

 

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

 

இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 95 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon