--- --:--:-- --

மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறி இளைஞரை அடித்த நபர்..!

5

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மனைவியோட தவறான தொடர்புகள் இருப்பதாக எண்ணி வடமாநில இளைஞரை தூக்கிச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். திவ்யாவுக்கு பத்து நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

பெற்றோரை இழந்த திவ்யா திருமணத்திற்கு முன் தனது பணம் இரண்டு லட்ச ரூபாயை பாதுகாப்பிற்காக அதே பகுதியை சேர்ந்த ஹார்ட்வர்டு உரிமையாளரிடம் கொடுத்து வைத்துள்ளார். அந்த பணத்தை வாங்கி தன்னிடம் தருமாறு திவ்யாவை தினேஷ் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 

தினேஷ் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் பணத்தை வாங்கி தர திவ்யா மறுத்துள்ளார். இதனால் அவருக்கும் திவ்யாவுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக கூறி அவரை அடித்து உதைத்து கொடுமை செய்த தினேஷ் நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கல் மற்றும் கம்பியை கொண்டு கடுமையாக தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

 

முகம், கை, கால் என உடல் முழுவதும் படுகாயமடைந்த ராகேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon