பஹத் பாசிலின் தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
தற்போது பஹத் பாசில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்துநிற்கிறார் . புஷ்பா, விக்ரம் என தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்து அவர் தமிழில் மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
அதுமட்டுமின்றி புஷ்பா 2 படத்தின்ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க இருக்கிறது. அதிலும் அவர் நடிக்க இருக்கிறார்.சமீபத்தில் நடிகை நஸ்ரியா கணவர் பஹத் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் மிக மிக ஒல்லியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அதை பற்றி கமெண்டில் கேள்வியும் எழுப்பி இருக்கின்றனர்.





