11 வயது சிறுவனை கடித்த நாய்..! சிறுவனுக்கு 70 தையல்..!
உத்திரபிரதேசத்தில் 11 வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்து குதறியதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வீட்டின் அருகே இருந்த பூங்காவில் 11 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது நடை பயிற்சிக்கு வந்த பெண்ணுடன் இருந்த பிட்புல் நாய் சிறுவனை எதிர்பாராதவிதமாக கடித்தது. இதனால் முகம் முழுவதும் காயமடைந்த சிறுவனுக்கு 70 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் செல்லப்பிராணியை வளர்த்த நாய் உரிமையாளருக்கு அபராதம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





