பிரபல ஹிந்தி நடிகை ரேகாவின் வீட்டுக்கு சீல்..! வீட்டுக் காவலாளிக்கு கொரொனா..!
பிரபல ஹிந்தி நடிகை ரேகாவின் வீட்டு காவலாளிக்கு கொரொனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரேகாவின் வீடு சீல் வைக்கப்பட்டது. நடிகர் ஜெமினி கணேசனின் மகளும் பிரபல நடிகையுமான ரேகா மும்பை பாந்திராவில் வசித்து வருகிறார்.
தற்போது மும்பையில் கொரொனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் ரேகாவின் வீட்டு காவலாளி ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து ரேகாவின் வீட்டுக்கு சீல் வைத்தும் கிருமி நாசினி தெளித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







