தந்தையை போலவே மகனையும் முகத்தில் கடித்த பாம்பு..!
பிரபல விலங்கியல் படத்தொகுப்பாளர் ஸ்டீவ் இர்வின் போலவே அவரது மகனையும் பாம்பு முகத்தில் கடித்த வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் விலங்குகளை அனாயசமாக கையாள்வது குறித்த தொடர்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமானதை தொடர்ந்து அவரது மகன் தந்தையைப் போலவே பாம்புகள் உள்ளிட்ட விஷம பூச்சிகளை கையாளுவதில் வல்லமை பெற்றிருந்தார். ஸ்டீவ் இர்வின் கையாண்ட போது அவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே வகை பாம்பு கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.







