--- --:--:-- --

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை..!

1

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டார். சென்னை அரும்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கபிலனின் மகள் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

 

உடனடியாக சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தூரிகையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

 

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திரைப்படங்களில் பணியாற்றி உள்ளதோடு இணையதளங்களில் எழுதியும் வந்துள்ளார். இலக்கியவாதிகள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon