--- --:--:-- --

மகன் என நினைத்து வேறொருவரின் சடலத்தை எரித்த குடும்பம்..!

2

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இறந்ததாக கூறப்படும் நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

 

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக கூலி வேலைக்கு சென்றதாக கூறிவிட்டு மணிகண்டன் வெளியே சென்றுள்ளார். அவருடைய தந்தையும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் தாயும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்த சூழலில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் மணிகண்டனின் தாயும் மனைவியும் உடலை பார்த்துள்ளனர். அப்போது அழுகிய நிலையில் கிடந்த உடலை மணிகண்டன் என நினைத்துள்ளனர். இதையடுத்து சடங்குகள் செய்து உடலை தகனம் செய்தனர்.

 

இந்த சூழலில் இறந்ததாக கூறப்பட்ட மணிகண்டன் அவரது வீட்டிற்கு வந்ததால் கிராம மக்கள் உறவினர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். எரித்தது யாருடைய உடல் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon