இளைஞரை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறிப்பு.. தட்டி தூக்கிய போலீஸ்..!
ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் சாலை நடந்து சென்ற இளைஞரை மிரட்டி google pay மூலம் ரூ.20,000 பணம் பறித்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராம்கி இரவு பணியை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிய போது அவரை நான்கு பேர் வழிமறித்து மிரட்டியுள்ளனர்.
அவர் பணம் தர மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி google pay மூலம் ரூ.20,000 பணத்தை தங்கள் எண்ணிற்கு அனுப்பி கொண்டனர்.
இதையடுத்து ராம்கி கொடுத்த புகாரில் காவல்துறையினர் ஆய்வு செய்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





