அதிமுகவில் இருந்து விலகினாலும் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன் – வைத்திலிங்கம்
அண்ணா திமுகவில் இருந்து விலகினாலும் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்”என திமுகவில் இணைந்த பின் வைத்திலிங்கம் பேட்டிளித்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கினார்.
இதில், ஓபிஎஸ் ஆதரவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த வைத்திலிங்கம், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இணைந்ததற்கான விளக்கத்தையும், ஓபிஎஸ்-ஐ விட்டு விலகியதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார். அப்போது அவர் பேசும்போது, “அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை. தமிழ்நாட்டு முதலமைச்சரை தமிழக மக்கள் போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள் என்றால் அவர் எல்லாருக்கும்மான திட்டங்களை செயல்படுத்துகிறார்.
மக்களின் மனதில் நிற்கிறார். நான் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இல்லாவிட்டாலும், அண்ணா ஆரம்பித்த தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக்கழகத்தில் என்னை இணைந்துக்கொண்டுள்ளேன்.” என்றார். ”ஓ.பன்னீர்செல்வத்தை விட்டு விலகி வருவதற்கு, தேர்தல் வர இருக்கிறது, முடிவு சீக்கிரம் எடுக்க வேண்டும், காலதாமதம் ஆகிறது. எனவே விலகி வந்தேன். ஓபிஎஸ் க்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. அண்ணன் நல்ல முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
2ஒரத்தநாடு தொகுயில் மீண்டும் போட்டியிடுவீர்களா, அந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஏதேனும் கோரிக்கை வைக்கப்பட்டதா என்ற கேள்வி பதிலளிக்கையில், ” அதுபோன்ற கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. தஞ்சையில் 26-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட எனது ஆதரவாளர்களும் திமுகவில் இணைகிறார்கள்” என்றார்.
மேலும் அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வதிகாரமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், “என்னை தனிப்பட்ட முறையில் அதிமுகவுக்கு சேர அழைத்தார்கள். நான் சேர தயாராக இல்லை. ஒன்றிணைந்தால்தான் இணைவேன் என்று அப்போதே தெரிவித்துவிட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.





