--- --:--:-- --

தேர்தல் எச்சரிக்கைகள்.. அமைச்சர்களுக்கு ரூல் போட்ட முதலமைச்சர்!

4

ந்த தொகுதியை கூட்டணிக்கு கொடுக்க வேண்டாம். இந்த வேட்பாளர் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் யாரும் தன்னிடம் வராதீர்கள் என ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

 

அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகள் வாரியாக நிர்வாகிகளின் கூட்டம் நடத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார். அத்துடன், தேர்தல் தொடர்பாக தொகுதிகளில் உங்களால் தீர்க்க முடியாத பிரச்னைகளை, ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்பது மிக மிக முக்கியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள அமைச்சர்கள் மற்றும் மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர்கள் ஆகியோர் உங்களின் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதியில் இருக்கும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, ஒருங்கிணைப்பு குழுவிடம் ஆலோசனை செய்யவும் கூறியுள்ளார்.

 

திமுக பங்கு வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், இதை கருத்தில் கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மற்றும் தோல்விக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

எனவே, வெற்றியை நழுவவிட்டால் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர் மற்றும் பொறுப்பு அமைச்சரின் பதவி பறிபோகும் என்பதை மறவாதீர்கள் என்றும் முதலமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தொகுதியை கூட்டணிக்கு கொடுக்க வேண்டாம், இந்த வேட்பாளர் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் யாரும் தன்னிடம் வராதீர்கள் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

மேலும், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை தானே இறுதி செய்கிறேன் என்பதையும், நான் தான் வேட்பாளராக நிற்கிறேன் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு வெற்றிக்காக பாடுபடுங்கள் என்று அமைச்சர்களிடம் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

நம்முடைய ஆட்சியின் சாதனைகளால் ஓட்டு போட மக்கள் ரெடி. நாம் நம்முடைய கட்சிக்காரர்களையும், கூட்டணி கட்சியினைரையும் ஒருங்கிணைத்து வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Right Menu Icon