--- --:--:-- --

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை!

1

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கொரொனாவை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்வி நிறுவனங்களை திறந்துகொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகின.

 

இத்தகவலை தனது டுவிட்டரில் மறுத்துள்ள உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை நாடு முழுவதும் நீடிப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon