எமதர்மா ராஜன் வேடமிட்டு கொரோனா நாட்டுப்புற பாடல்கள் பாடி விழிப்புணர்வு சிவகங்கை போலீசார் ஏற்பாடு!
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் கொரரோன விழிப்புணர்வு சிவகங்கை நகர் காவல் நிலையம் சார்பில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேடை நடன சங்கம் சார்பில் நடைபெற்றன. எம தர்மராஜ வேடமனிந்து இரு சக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டன.

பின்னர் கொரரோன விழிப்புணர்வு பாடல்களை நாட்டுப்புற பாட்டுகள் மாதிரி பாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். அரசு ஊழியர்களை ஏற்றி வந்த அரசு பஸ்களை போலீசார் மாஸ்க் அணிந்து உள்ளர்களா என சோதனை செய்தனர் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கை அரண்மனை வாசலில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றன.







