--- --:--:-- --

தொடர் முறைகேடு புகார் எதிரொலி : திருப்பூர் பழனிச்சாமி நகர் ரேசன் கடை விற்பனையாளர் இடமாற்றம்!!

ce682ae1-e96e-4524-8d91-f74d5358500b

திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியிலுள்ள பழனிச்சாமி நகர் ரேசன் கடை விற்பனையாளர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தற்போது அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

 

திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகரில் ரேசன் கடை செயல்படுகிறது.இங்கு பெண் விற்பனையாளர் பணியாற்றி வந்தார். இந்த ரேசன் கடையில் பொது மக்களுக்கு அரிசி, பருப்பு,சர்க்கரை போன்ற ரேசன் பொருட்களை சரிவர வழங்காமல் அலைக்கழிப்பு செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக இப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தனர்.

 

மேலும் இந்த ரேசன் கடையில் ரேசன் பொருட்கள் சரிவர வழங்காமல் அலைக்கழிப்பு செய்து, வருவதாகவும், அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்களை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவது குறித்தும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிலும் பொதுமக்கள் சார்பில் ஏராளான புகார்கள் அளிக்கப்பட்டன.

 

இந்நிலையில், கடந்த வாரம் இந்த ரேசன் கடையில் சுமார் 80 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ரேசன் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.இந்த நிலையில் பழனிச்சாமி நகர் ரேசன் கடை பெண் விற்பனையாளரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கேரிபாளையம் பகுதியிலுள்ள ரேசன் கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மன்னரை பகுதியிலுள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றியவர் பழனிச்சாமி நகர் ரேசன் கடைக்கு விற்பனையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon