தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்..!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலூர், ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் உறைப்பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





