--- --:--:-- --

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும்! முக ஸ்டாலின் வலியுறுத்தல்!

5.1

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்த நிலையில் கொரொனா வைரஸ் தற்போது அதிக வீரியம் கொண்ட கிளேட் ஏ13ஐ ஆக உருமாறி பரவி வருகிறது என்ற தகவல் மக்கள் அனைவரையும் அச்சப்பட வைத்திருப்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 

கடந்த சில நாட்களாக குழந்தைகள் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் ,என பல தரப்பினருக்கும் கொரொனா நோய் தொற்று பரவி வருவதை அரசு வெளியிடும் அறிக்கைகளே தெரிவிக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது பலருக்கு நோய் தொற்ற காரணமாகிவிடும் என்று மருத்துவர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

 

கொரொனா நோய்த் தடுப்பில் முற்றிலுமாக அரசு பெயில் ஆகிகியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாஸா பெயிலா என்பதை கண்டறிவதற்காக பொதுத் தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டுவது அக்கறையற்ற செயல்பாட்டையே காட்டுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையான பாதுகாப்பான நிலை உருவான பிறகே தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon