--- --:--:-- --

யானை அன்னாசிப்பழத்தை விழுங்கியது தற்செயலாக நடந்த நிகழ்வு!

4

கேரளாவில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தில் இருந்து யானை உயிரிழந்த சம்பவம் சர்ச்சையான ஒன்று என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கில் இருந்து உணவு தேடி வந்த 15 வயது கர்ப்பிணி யானை வெடி மருந்து வாயில் வெடித்ததால் உண்ண வழியின்றி பட்டினியாக கடந்த 27ஆம் தேதி உயிரை விட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கேரள அரசு இது தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்துள்ளது.

 

காட்டுப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட பலர் இந்த வகையில் சட்ட விரோதமாக வெடிமருந்துகளை பயன்படுத்துவதாகவும் அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon