--- --:--:-- --

கொரோனா தொற்று சமுதாய அடிப்படையில் பரவுமா ?

12

நாட்டில் கொரொனா தொற்று சமுதாய அடிப்படையில் பரவுமா என்பது விரைவில் தெரிந்துவிடும் என ஐ‌சிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்று பாதித்த வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாத நிலையிலும் சுவாச மண்டல பாதிப்புகள் போன்ற அறிகுறிகள் காணப்படும் ரத்த மாதிரிகள் பல மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டு தீவிரமாக சோதிக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் முதற்கட்ட முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் இறுதி முடிவுகள் வெளியாகும் போது கொரொனா உள்நாட்டு சமூக தொற்றாக மாறி உள்ளதா என்பது தெரியவரும். இதனிடையே சமூகத் தொற்றாக கொரொனா துவங்க 30 நாட்கள் ஆகும் எனவும், அந்த முப்பது நாட்களும் சமாளித்து விட்டால் சமூகத் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றி விடலாம் என்றும் ஐ சி எம் ஆர் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

 

கொரொனா தொற்றின் இயல்புக்கு ஏற்றவாறு அதற்கான சோதனைகள் நடைமுறைகள் மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 10 லட்சம் சோதனை உபகரணங்களுக்கு ஐசிஎம்ஆர் ஆர்டர் கொடுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon