--- --:--:-- --

முகம் பொலிவாக இருக்க நடிகை மைனா நந்தினி பயன்படுத்தும் எண்ணெய் என்ன தெரியுமா?

8

விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் மைனா நந்தினி. நடிகை, பிக்பாஸ் பிரபலம், தொகுப்பாளினி, யூடியூப்பர் என பன்முகங்களை கொண்டவர்.

 

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவ்வளவாக எந்த ஒரு நிகழ்ச்சியும் பங்குபெறவில்லை, மாறாக இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் பதிவிடுவது, படங்கள் கமிட்டாவது என பிஸியாக இருக்கிறார்.

 

பாதாம் எண்ணெய் முக பொலிவுக்கு மிக மிக முக்கியமாம். வாரத்திற்கு ஒருமுறை மைனா நந்தினி கட்டாயம் முகத்திற்கு பாதாம் எண்ணெய் பூசி 10 நிமிடம் மசாஜ் செய்வாராம்.

 

வாரத்திற்கு 3 முறை மைனா நந்தினி முகத்திற்கு விளக்கெண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்வாராம், பின்பு 15 நிமிடம் அப்படியே ஊறவிட்டு முகத்தை வாஷ் செய்வாராம்.

 

இப்படி செய்வது முக சுருக்களை தடுக்குமாம், முகத்திற்கு இயற்கையாகவே பொலிவை தருமாம். முகத்தை பொலிவாக்க மைனா நந்தினி முக்கியமாக எடுத்துக் கொள்ளும் விஷயம் பாதாம் மற்றும் கருப்பு திராட்சையாம். இதை காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவாராம்.

Right Menu Icon