--- --:--:-- --

திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

57ddeca0-2dc6-4326-8d92-6427ff3f0c28

திமுக தலைமையை பகிரங்கமாக விமர்சித்தும் , பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ்ந்து பேசிய முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

திமுகவில் மாநில இளைஞரணிச் செயலாைராக இருந்தவர் முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம். சேலம் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தவர். இவரை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாநில விவசாய அணிச் செயலாளர் பெறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை, கே.பி.ராமலிங்கம் விமர்சித்திருந்தார். அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் புகழாரம் சூட்டிய காரணத்தால் கே.பி.ராமலிங்கத்தின் கட்சிப் பதவியைப் பறித்ததுடன், விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியிருந்தது திமுக மேலிடம் .

 

இந்நிலையில், திமுக மேலிடம் அனுப்பிய நோட்டீசுக்கு கே.பி.ராமலிங்கம் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அவருடைய விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி, கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon