சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் விஜய்..!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாமை, சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் விஜய் இன்று குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார்.
இன்று மற்றும் நாளை (ஜூன் 16, 17) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில், சட்டப்பேரவையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், அவையின் மரபுகள் மற்றும் சட்டமன்ற விதிகள் குறித்து எம்.எல்.ஏ-க்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.





