வாகனங்களில் சட்டவிரோதமாகச் சிவப்பு மற்றும் நீல நிற ஸ்ட்ரோப் விளக்கு: கடுமையான நடவடிக்கை
அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சட்டவிரோதமாகச் சிவப்பு மற்றும் நீல நிற ஸ்ட்ரோப் (Red-Blue Strobe) விளக்குகளைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும், அவ்வாறு பொருத்தப்பட்டுள்ள அனுமதியற்ற விளக்குகளை வாகன ஓட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




