--- --:--:-- --

அடுத்த 48 நேரம்… .. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

fg

டுத்த 48 மணி நேரத்துக்கு டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை விடை பெற்று, வட கிழக்கு பருவ மழை தாமதமாக இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன் 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.

 

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

இந்நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் கன மழை கொட்டும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நாகை, தஞ்சை, புதுக்கோட்டை , திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுரகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி என 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon