--- --:--:-- --

கணவரை இழந்த சில நாட்களில் படப்பிடிப்பு சென்றுவிட்டாரா மீனா..!

13

டிகை மீனா 80களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய ஒரு பிரபலம். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.

 

இவரது மகள் நைனிகா விஜய்யுடன் தெறி படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் நன்கு அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

 

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் 28ம் தேதி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் கடும் துக்கத்தில் உள்ளனர்.

 

இந்த நிலையில் மீனா கணவர் இறந்த சில நாட்களில் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார் என சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் அப்புகைப்படங்கள் எப்போதோ எடுக்கப்பட்டதாம்.

Right Menu Icon