--- --:--:-- --

குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க ஆசை : சிருஷ்டி

7

குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை ஸ்ருஷ்டி தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த நடிகை சிருஷ்டி இசை படத்தின் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானார். அதே வருடத்தில் அவர் நடித்த ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு படமும் வெளியானது. இரண்டு படங்களிலும் அவர் துணை வேடங்களில் நடித்திருந்தார்.

 

தற்போது அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் கட்டில். இந்த படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த படத்தை கணேஷ்பாபு இயக்கியிருக்கிறார்.

 

தனக்கு சாதனை கதாபாத்திரம் பிடிக்கும் எனவும் அதிலும் குறிப்பாக பிரபல ஹிந்தி நடிகை ரேகா வேடத்தில் நடிப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon