--- --:--:-- --

ஸ்டாலினுக்கு ஆதரவாக டிவீட் செய்துள்ள நடிகர் சூர்யா..!

8

மாமல்லபுரம் அருகே வசிக்கும் பழங்குடியின மக்கள் வீடுகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட நடிகர் சூர்யா முதலமைச்சர் மு க ஸ்டாலின் பழங்குடியின மக்கள் இல்லம் தேடி சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா மட்டும் இல்லை எனவும் புதிய நம்பிக்கை எனவும் கூறியுள்ளார்.

 

காலங்காலமாக தொடர்ந்து எளிய மக்களின் எண்ணங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Right Menu Icon