--- --:--:-- --

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்.!

6

மிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இதன் காரணமாக வெள்ளிக்கிழமையன்று டெல்டா மாவட்டங்கள் கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

அதேபோல் சனிக்கிழமை டெல்டா மாவட்டங்கள் தர்மபுரி, நாமக்கல், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலும் 8-ஆம் தேதியன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை ,கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon