முன்விரோதம் காரணமாக திருமண வீட்டில் அரிவாளால் வெட்டு..!
சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக திருமண வீட்டில் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை அருகே நடைபெற்ற திருமண விழாவிற்கு சென்ற ஆறுமுகம் என்பவரை பிரவீன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யக்கோரி தேசிய நெடுஞ்சாலை உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





