--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு..!

6

மிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

 

கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon