2வது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன்..!
22 வயது பழங்குடியினப் பெண் கணவரால் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது. டெல்லி ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணின் கொலையை தொடர்ந்து நாட்டில் அதே பாணியில் பல கொலை சம்பவங்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன. அப்படி ஒரு கொடூர சம்பவம் ஒன்று ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண் ரூபிக்கா என்பவருக்கும் அங்கு வசிக்கும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்சாரிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இந்த பெண் ரூபிகாவை 10-15 நாள்களுக்கு முன்னர் தான் இரண்டாவது திருமணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ரூபிகா கடந்த சில நாள்களாக மாயமான நிலையில், ரூபிகாவின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என காவல்துறையினர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டருகே நாய்கள் எலும்புகளை கடித்து உண்டு கொண்டுதிருந்ததை அப்பகுதியினர் சந்தேகத்துடன் பார்த்துள்ளனர்.





