--- --:--:-- --

லாரி மோதி தூக்கி வீசப்பட்ட தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

2

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது லாரி மோதியதில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

வத்தலகுண்டு அண்ணா நகரை சேர்ந்த மீனாசாமி ஜெயக்கொடி தம்பதி உறவினர் ஒருவரது துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தங்களது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். வத்தலகுண்டு சாலையை கடந்து புறவழிச்சாலையை அடைந்தவர்கள் எதிர்புறம் செல்ல முயன்றுள்ளனர்.

 

அப்போது இடதுபுறத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரியை இவர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் நிலைதடுமாறிய லாரியும் சாலையோரம் கவிழ்ந்தது.

 

Right Menu Icon