--- --:--:-- --

பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது..!

7.1

பிரேசிலின் சீன தடுப்பூசி சோதனையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த சைபோநெக் என்ற நிறுவனம் கொரொனா வேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

 

இந்த தடுப்பூசி பிரேசில் உள்ள 7 மாகாண பொது மக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியின் 60 லட்ச டோஸ்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய பிரேசிலின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்தது.

 

இந்த நிலையில் கொரொனா வேக் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும்போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்திவைக்க பிரேசில் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon