--- --:--:-- --

தமிழகத்தில் தினமும் ஒரே மாதிரியாக பதிவாகும் கொரோனா: இன்று 5871 பேருக்கு பாதிப்பு.. உயிரிழந்தோர் 119 பேர்..! சென்னையில் 993 பேருக்கு தொற்று!!

carona

மிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒரே மாதிரியாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 5,871பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 119 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரே மாதிரியாக 6 ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு 100 தாண்டியும் பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5834 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை சிறிது அதிகரித்து 5871 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14, 520 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 5-வது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து 993 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்றைய 986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 1,12,059 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றுக்கு 118 பேர் பலியான நிலையில், இன்றைய உயிரிழப்பு 119 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5, 278 ஆக உயர்ந்துள்ளது.
இது வரை, தமிழகம் முழுவதும் 34, 32,025 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 71,525 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 439,, திருவள்ளூர் 407 , காஞ்சி 321, கடலூர் 339,கோவை 294, ராணிப்பேட்டை 254, தேனி 282, விருதுநகர் 292, சேலம் 217,என கூடுதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று பாதிப்பு அதிகரித்து 169 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon