--- --:--:-- --

கொரொனா பாசிடிவ் வீட்டில் சென்று தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறும் நர்ஸ்..! அதிர்ச்சியில் நோயாளிகள்..!

12

யிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரொனா நோயாளிகளை ஏழு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்ப கோரி ஆட்சியர் தெரிவித்ததாக செவிலியர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பெரியார் பொது மருத்துவமனையில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இடவசதி இல்லாததால் கொரொனா சிகிச்சை பெற்று வருபவர்கள் ஏழு நாட்களுக்கு பிறகு கொரொனா இருந்தாலும் அவர்களை வீட்டிற்கு அனுப்பி தனிமைப்படுத்தி இருக்கும்படி கூறுவதாக நோயாளிகள் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக செவிலியர் ஒருவர் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் கேட்டபோது படுக்கை வசதி இல்லாததால் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ஏழு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon