--- --:--:-- --

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

11.1

மிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

 

சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு வடகிழக்கு தென்மேற்கு பகுதியில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதுவரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் குளச்சல், தனுஷ்கோடி கடலோர பகுதிகளில் அவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon