--- --:--:-- --

59 செயலிகள் தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவின் WION இணையதளத்திற்கு சீனா தடை!

1

இந்தியாவில் தங்கள் நாட்டை சேர்ந்த 59 செயலிகள் தடை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்திய செய்தி இணையத்தளமான வியான் வலைதளத்தை சீனா முடக்கியுள்ளது. லடாக் எல்லையில் நடந்த மோதலை அடுத்து டிக் டாக், யூசி ப்ரவுசர், ஷேர் சாட் உட்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது.

 

இதனால் அந்த செய்திகளில் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு பதிலடியாக வியான் செய்தி இணையத்தளமான www.wionnews.com ஐ அரசு தடை செய்துள்ளது. வேர்ல்டு இஸ் ஒன் நியூஸ் எனப்படும் இந்தியாவின் தொலைக்காட்சி சேனல் ஜீ மீடியா நெட்வர்க் நிறுவனத்தில் ஒரு பகுதியாகும்.

 

இதன் மீதான தடையை சீன இணையக் கண்காணிப்புக் குழுவான க்ரேட் பையர் டாட் ஓ‌ஆர்‌ஜி உறுதி செய்துள்ளது. செய்தி இணையதளம் முடக்கப்பட்டு இருப்பதால் சீனாவில் இணையதள செய்திகளை இந்தியர்கள் பார்க்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon