--- --:--:-- --

கொரொனா அறிகுறியுடன் இறந்தவருக்கு கொரொனா நெகட்டிவ்..!

10

யிலாடுதுறையில் கொரொனா அறிகுறியுடன் இறந்தவரின் உடலை உறவினர்கள் ஆட்டோவில் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன்.

 

இவர் கடந்த 4ஆம் தேதி தொற்று அறிகுறிகளுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நிலையில் மருத்துவர்கள் கொரொனா சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வெளியானது.

 

இதற்கிடையே சவுந்தரராஜனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் படுக்கைக்கு மாற்று வதற்கு முன்பாகவே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை ஊழியர்கள் எடுத்து சென்றபோது வழிமறித்து உறவினர்கள் தொற்று பாதிப்பு இல்லாத அவரின் உடலை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி போராட்டத்தில் குதித்தனர்.

 

சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி உடலை எரியூட்ட வேண்டும் என்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காத சௌந்தரராஜனின் உறவினர்கள் அவரது உடலை ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon