--- --:--:-- --

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறும்..!

9

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறும் என்று பேரவையின் செயலாளர் முனுசாமி அறிவித்திருக்கிறார். புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.

 

சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் நடத்த புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் பேரவை தலைவர் தேர்தலுக்கு வரும் 15ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற உள்ளது என்றும் தற்காலிக பேரவைத் தலைவர் லட்சுமி நாராயணன் இந்த தேர்தலை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேரவைத் தலைவர் பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் மணவெளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏம்பலம் செல்வம் என்பவர் மனு தாக்கல் செய்கிறார். துணைப் பேரவை தலைவர் பதவிக்கு என் ஆர் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon