தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்..!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியிருக்கும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானிலையே நிலவும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஒரு சில மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.







