--- --:--:-- --

கொரொனா தொற்று குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை..!

5

கொரொனா தொற்று குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் இருப்பினும் அது உருமாற்றம் அடைய நேர்ந்தால் குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்றும் நிதி ஆயுக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு பரவக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நமது கவனம் முழுவதும் குழந்தைகளுக்கு பரவக்கூடிய கோவிட் -19 தொற்றும் இதுதான் நடக்கிறது என்று வி.கே.பால் தெரிவித்தார்.

 

தற்போதைய சூழலில் அறிகுறி அற்ற நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு பாதிப்பு என்பது இதுவரை இல்லை அல்லது மிக மிக குறைந்த அளவில் தான் இருக்கிறது என்று அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon