--- --:--:-- --

ஊரடங்கு முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்..!

4

ரடங்கு முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் தேர்ச்சி குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரையில் எந்த ஒரு மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது என்றும் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். அதன் பின்னர் பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon