கர்நாடகாவில் 81 கல்லூரி மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!
கர்நாடக மாநிலத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் நான்கு நாட்களில் மட்டும் 81 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட கல்லூரிகள் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 17ஆம் தேதி திறக்கப்பட்டது.
கொரொனா வழிமுறைகளை பின்பற்றி அறிவுறுத்தப்பட்டு கல்லூரிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரொனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த நான்கு நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பரிசோதித்தது 81 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.






