கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய மருத்துவர்..!
இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். சில வீடியோக்கள் சிரிக்கவைக்கும் ஆனால் ஓரிரு வீடியோக்கள் மட்டுமே கண்ணீர் சிந்த வைக்கும் அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவரது முக்கிய ஆசை எதுவென்று கேட்டுள்ளார்.
பேட்மேனை பார்ப்பது தான் தனது தீவிர ஆசை என்று சிறுவன் கூற அடுத்த நாளே பேட்மேன் உடையில் வந்து சிறுவனை மருத்துவர் மகிழ்வித்து உள்ளார். இது தொடர்பான வீடியோ தான் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.






