திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொரொனா தொற்று காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பெருந்தொற்றை சிறப்பாக கையாண்டு வருவதால் அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்று கேபி ராமலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் கேபி ராமலிங்கம் திமுக கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி ராமலிங்கம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதையடுத்து பாஜகவில் இணைந்த கேபி ராமலிங்கம் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சரவைக் இராமலிங்கம் சந்திக்கவுள்ளார்.






