--- --:--:-- --

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன்..!

1

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பான வழக்கில் ஹேம்நாத் 14ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதுபோன்ற சூழலில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் துறை வழக்கறிஞர் சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஹேம்நாத்க்கு எதிராக குற்றம் சாட்டும் வகையிலான ஆதாரங்கள் இல்லை எனக்கூறினார்.

 

60 நாட்களாக சிறையில் உள்ளதால் ஹேம்நாத்க்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்படாததை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

 

மறு உத்தரவு வரும் வரை மதுரையில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி இருப்பதால் வெளியே வர முடியாத சூழல் உள்ளது.

Leave a Reply

Right Menu Icon