--- --:--:-- --

வஞ்சிப்பாளையம் பகுதியில் p19 பஸ் இயக்கப்படுமா?

வஞ்சிப்பாளையம் பகுதியில்  p19 பஸ் இயக்கப்படுமா?

ஞ்சிப்பாளையம் பகுதிக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த P-19 அரசு பஸ்சை மீண்டும் இயக்கி, பள்ளிக் குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்று, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகேயுள்ள வஞ்சிபாளையம், அவினாசி – பல்லடம் சாலையில் அமைந்திருந்தாலும், உரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. குறைந்த எண்ணிக்கையில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வஞ்சிப்பாளையத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதி குழந்தைகள் படித்து வரும் நிலையில், அவர்களின் நலன் கருதி அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

கொரோனா காலத்தில் அமலான பொது முடக்கத்தால், பேருந்து சேவை குறைக்கப்பட்டது. தற்போது 9ம் வகுப்பு முதல் கல்லூரி வரை வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு பேருந்து சேவைகள் பல இடங்களில் இன்னமும் முழுமையாக தொடங்கப்படவில்லை. வஞ்சிப்பாளையமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்பகுதிக்கு பேருந்து சேவை தொடங்கினாலும், இன்னும் முழுமையாக நடைபெறவில்லை.

 

வஞ்சிப்பாளையம் பகுதிக்கு காலையில் இயக்கப்பட்டு வந்த p19 என்ற எண்ணுள்ள பேருந்து சேவை தொடராததால், பள்ளி குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இப்பகுதியில் காலை நேரத்தில் p19 பேருந்து சேவையை தொடர, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon