--- --:--:-- --

தமிழக அரசை கண்டித்து கரூரில் வரும் 29ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்..!

6

மிழக அரசை கண்டித்து கரூரில் வரும் 29ஆம் தேதி கண்டன பொது கூட்டம் நடைபெறும் என்று எதிர் கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

கடந்த 19ஆம் தேதி கரூர் ஊராட்சி குழு தலைவர் தேர்தலின் பொழுது அதிமுக கவுன்சிலர் திருவிக கடத்தப்பட்ட நிகழ்வு, அதற்கு அடுத்த நாள் கட்சி நிர்வாகி சிவராஜ் தாக்கப்பட்ட நிகழ்வு போன்றவற்றை தனது அறிக்கையில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 

திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமான அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

 

Right Menu Icon