வணிகமயமான கல்வி, மருத்துவம்: மோகன் பகவத்
கல்வி, மருத்துவம் ஆகியவை இன்று எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டதாக RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஒரு காலத்தில் சேவை துறைகளாக இருந்த கல்வி, மருத்துவம் இப்போது வணிகமயம் ஆகிவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தரமான புற்றுநோய் சிகிச்சை என்பது இந்தியாவில் 8 – 10 நகரங்களில் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி தலைமையிலான அரசு குறித்த விமர்சனமாகவே இது பார்க்கப்படுகிறது.





